Sri Paduka Sahasram - Paththati 11 - ஸஞ்சார பத்ததி (ச்லோகம் 269)

Paththati 11 - ஸஞ்சார பத்ததி

நிஜ ஸம்ஹநந ப்ரஸக்த லாஸ்யம் சரதி த்வாம் அதிருஹ்ய ரங்கநாத: பதரக்ஷிணி பாவநத்வம் ஆஸ்தாம் ரஸிக ஆஸ்வாதம் அத: பரம் ந வித்ம:

ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! ஸ்ரீரங்கநாதன் உன் மீது ஏறிக்கொண்டு, தனது அழகிய திருமேனியில் நேர்த்தியான நாட்டியம் ஏற்படுவது போன்று, ஒய்யாரமாக நடக்கிறான். இத்தகைய திவ்யமான நடையழகைக் காண்பவர்களுக்கு அனைத்துப் பாவங்களும் நீங்குகின்றன என்பது ஒரு புறம் இருக்கட்டும், இது போன்ற மற்றோர் அழகை நாம் அறியவில்லை.