Sri Paduka Sahasram - Paththati 11 - ஸஞ்சார பத்ததி (ச்லோகம் 268)

Paththati 11 - ஸஞ்சார பத்ததி

ஸமயேஷு அபதிச்ய ஜைத்ரயாத்ராம் விவிதாந்த: புர வாகுரா வ்யதீத: நியதம் மணிபாதுகே பவத்யா ரமதே வர்த்மநி ரங்க ஸார்வபௌம:

இரத்தினக் கற்கள் கொண்டு இழைக்கப்பட்ட பாதுகையே! ஸ்ரீரங்கநாதன் தனது அந்தப்புரத்தில், மஹாலக்ஷ்மி போன்ற பலவிதமான வலைகளில் அகப்பட்டு உள்ளான். ஆயினும் உன்னுடன் விளையாடும் ஆவல் கொள்ளும் அவன், பல்வேறு காலங்களில், “ஏதோ அரக்கனை அழிக்கப் போகிறேன்”, என்று தனது வெற்றிக்கான காரணத்தைக் கூறியபடி வெளிவந்து விடுகிறான் .