Sri Paduka Sahasram - Paththati 11 - ஸஞ்சார பத்ததி (ச்லோகம் 267)
Paththati 11 - ஸஞ்சார பத்ததி
ஸ்ப்ருசத: சிரஸா பதேந ச த்வாம் கதிம் உத்திச்ய முகுந்த பாதுகே த்வௌ அவரோஹதி பச்சிம: பதாத் ஸ்வாத் அத்ரோஹத்யநக: ததேவ பூர்வ:
க்ருஷ்ணனின் பாதுகையே! உன்னை இருவர் தொடுகின்றனர். ஒருவர் உன்னைத் தனது கால்கள் கொண்டு தொடுகிறார், மற்றோருவர் உன்னைத் தனது தலையால் தாங்குகிறார். தலையால் தொட்டவர் மேலே (பரமபதம்) ஏறியபடி உள்ளார். காலால் தொட்டவர் (நம்பெருமாள் ஆசனத்தில் இருந்து இறங்க எண்ணி, பாதுகை மீது திருவடி வைக்கிறான்) கீழே இறங்குகிறார்.