Sri Paduka Sahasram - Paththati 11 - ஸஞ்சார பத்ததி (ச்லோகம் 266)

Paththati 11 - ஸஞ்சார பத்ததி

சிரஸா பவதீம் ததாதி கச்சித் வித்ருத: கோ அபி பதஸ்ப்ருசா பவத்யா உபயோ: மதுவைரி பாதரக்ஷே த்வத் அதீநாம் கதிம் ஆமநந்தி ஸந்த:

மது என்ற அசுரனை அழித்த கண்ணனின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! பெரியபெருமாள் சஞ்சாரம் செய்ய வேண்டும் என்று விருப்பம் கொண்டவுடன், உன்னைத் தனது தலையில் ஏற்றியபடி ஒருவர் வருகிறார். பெரியபெருமாளின் திருவடிகளைத் தாங்கி நிற்கும் ஒருவர் உன்னால் தாங்கப்படுகிறார். ஆக இந்த இரண்டு கதிக்கும் நீயே ஆதாரம் என்று பெரியவர்கள் கூறுகின்றனர்.