Sri Paduka Sahasram - Paththati 11 - ஸஞ்சார பத்ததி (ச்லோகம் 265)

Paththati 11 - ஸஞ்சார பத்ததி

க்ஷமயா ஜகதாம் அபி த்ரயாணாம் அவநே தேவி பதாவநி த்வயைவ அபிகம்யதம: அபி ஸம்ச்ரிதாநாம் அபிகந்தா பவதி ஸ்வயம் முகுந்த:

பாதுகாதேவீ! அனைத்து அடியார்களும் தனது இருப்பிடத்திற்கு வந்து தன்னை வணங்கும்படியாக இருக்கும் ஸ்வபாவம் உடையவன் பெரியபெருமாள் ஆவான். நீயோ மூன்று உலகங்களையும் பாதுகாப்பதில் சிந்தனை கொண்டவளாக உள்ளாய். ஆக உன்னால்தான் ஸ்ரீரங்கநாதன், தனது இருப்பிடத்தை விட்டுக் கிளம்பி, அடியார்கள் உள்ள இடத்தை, தானே தேடிப் போகிறான்.