Sri Paduka Sahasram - Paththati 11 - ஸஞ்சார பத்ததி (ச்லோகம் 264)
Paththati 11 - ஸஞ்சார பத்ததி
ரஜஸா தமஸா ச துஷ்ட ஸத்த்வே கஹநே சேதஸி மாமகே முகுந்த: உசிதம் ம்ருகயா விஹாரம் இச்சந் பவதீம் ஆத்ருத பாதுகே பதாப்யாம்
பாதுகையே! என்னுடைய மனமானது ரஜோகுணத்தாலும், தமோ குணத்தாலும் கெட்டுப் போய், இருண்ட காடு போன்று உள்ளது. இந்த மனதில் ஸத்வ குணத்தைச் சேர்ந்த ஏதும் உண்டாவதில்லை. இவ்விதம் என் மனம் இருள் மற்றும் புழுதி அடைந்து உள்ளது. இந்த இருண்ட கானகத்தில் வேட்டையாடி, அதில் உள்ள விலங்குகளைத் துரத்த ஸ்ரீரங்கநாதன் விருப்பம் கொண்டான். ஆகையால் உன்னைத் தனது திருவடிகளில் சாற்றியபடி எனது மனதிற்குள் வந்தான் போலும்.