Sri Paduka Sahasram - Paththati 11 - ஸஞ்சார பத்ததி (ச்லோகம் 263)

Paththati 11 - ஸஞ்சார பத்ததி

த்வத் அதீந பரிக்ரமோ முகுந்த: தத் அதீந: தவ பாதுகே விஹார: இதரேதர பாரதந்த்ர்யம் இத்தம் யுவயோ: ஸித்தம் அநந்ய தந்த்ர பூம்நோ:

பாதுகையே! நீயும் ஸ்ரீரங்கநாதனும் எதற்காகவும், யாரையும் நாடி இருப்பதில்லை. அதனால் உங்கள் இருவர் விஷயத்தில் நடப்பது என்ன தெரியுமா? தான் அங்கும் இங்கும் ஸஞ்சாரம் செய்வதற்கு உன்னையே ஸ்ரீரங்கநாதன் நாடி உள்ளான். இது போன்று அதே விஷயத்தின் மூலம், உனது கம்பீரம் வெளிப்பட நீ அவனை நாடி இருக்க வேண்டியுள்ளது. இப்படி ஒருவரை ஒருவர் சார்ந்து உள்ளீர்கள்.