Sri Paduka Sahasram - Paththati 11 - ஸஞ்சார பத்ததி (ச்லோகம் 262)

Paththati 11 - ஸஞ்சார பத்ததி

சரத: சதம் அம்ப பாதுகே ஸ்யாம் ஸமய ஆஹூத பிதாமஹ ஸ்துதாநி மணிமண்டபிகாஸு ரங்கபர்த்து: த்வததீநாநி கதாகதாநி பச்யந்

இராமனின் திருவடிகளை அவனது தாய்போன்று பாதுகாக்கும் பாதுகையே! உற்சவ காலத்தில் ப்ரம்மன் உட்பட அனைத்து தேவதைகளும் இரத்தினக்கற்கள் இழைக்கப்பட்ட மண்டபத்தில் வீற்றுள்ள ஸ்ரீரங்கநாதனைத் துதிக்கக் காத்து நிற்கின்றனர். உன்னைத் தனது திருவடிகளில் சாற்றிக் கொண்டு அரங்கன் வருகிறான். இவ்விதமாக உள்ள இந்த ஸ்ரீரங்கநாதனின் சஞ்சாரத்தை நான் நூறு வருடங்கள் திருவரங்கத்தில் இருந்து காண வேண்டும்.