Sri Paduka Sahasram - Paththati 11 - ஸஞ்சார பத்ததி (ச்லோகம் 261)
Paththati 11 - ஸஞ்சார பத்ததி
அக்ரஸ்தே கமிஷ்யாமி ம்ருத்நந்தீ குசகண்டகாந் இதி சீதா அபி யத்வ்ருத்திம் இயேஷ ப்ரணமாமி தாம்
பாதுகையே! இராமன் கானகம் புறப்பட்டபோது, நீ அவன் முன்பாகச் சென்று தர்ப்பைப் புற்கள், முள் ஆகியவற்றை மிதித்தபடி, நான் செல்கிறேன் என்று புறப்பட்டாய். உனது இந்தக் கைங்கர்யத்தைக் காண்பதற்குச் சீதை மிகவும் ஆசைப்பட்டாள். அப்படிப்பட்ட உன்னை நான் வணங்குகிறேன்.