Sri Paduka Sahasram - Paththati 10 - ச்ருங்கார பத்ததி (ச்லோகம் 259)
Paththati 10 - ச்ருங்கார பத்ததி
உபநிஷத் அபலாபி: நித்யம் உத்தம்ஸநீயம் கிம் அபி ஜலதிகந்யா ஹஸ்த ஸம்வாஹநார்ஹம் தவ து சரணரக்ஷே தேவி லீலாரவிந்தம் சரண ஸரஸிஜம் தத் சாரு சாணூரஹந்து:
பெரியபெருமாளின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! உபநிஷத்துக்கள் என்னும் பெண்கள், பெரியபெருமாளின் திருவடித் தாமரைகளைத் தங்கள் தலைகளில் சூட்டிக் கொள்கின்றனர். திருப்பாற்கடலில் அவதரித்த மஹாலக்ஷ்மி அந்த திருவடிகளைத் தனது திருக்கைகளால் பிடித்தபடி உள்ளாள். சாணுரனை மாய்த்த க்ருஷ்ணனாகிய பெரியபெருமாளின் திருவடிகள், உனக்கு ஒரு விளையாட்டுப் பொருளாக உள்ள தாமரையாக உள்ளது.