Sri Paduka Sahasram - Paththati 10 - ச்ருங்கார பத்ததி (ச்லோகம் 258)

Paththati 10 - ச்ருங்கார பத்ததி

சரணகமல ஸங்காத் ரங்கநாதஸ்ய நித்யம் நிகமபரிமளம் த்வம் பாதுகே நிர்வமந்தீ நியதம் அதிசயாநா வர்த்தஸே ஸாவரோதம் ஹ்ருதயம் அதிவஸந்தீம் மாலிகாம் வைஜயந்தீம்

அழகியமணவாளனின் பாதுகையே! பெரியபெருமாளின் திருமார்பில் உள்ள மஹாலக்ஷ்மியுடன் தொடர்பு கொண்டுள்ளதால், அவன் அணிந்துள்ள வைஜயந்தி என்கிற மாலைக்கு நறுமணம் அதிகமே ஆகும். ஆயினும் அவனது திருவடிகளின் தொடர்பு உனக்கு மட்டுமே அல்லவா உள்ளது? இதன் மூலம் நீ எப்போதும் வேதங்களின் நறுமணத்தை பரப்பியபடி உள்ளாய். ஆக ஸ்ரீரங்கநாச்சியாரின் தொடர்பு பெற்ற அந்த மாலையை விட, அவனது திருவடிகளின் தொடர்பு பெற்ற நீ உயர்ந்தே உள்ளாய்.