Sri Paduka Sahasram - Paththati 10 - ச்ருங்கார பத்ததி (ச்லோகம் 257)

Paththati 10 - ச்ருங்கார பத்ததி

சயிதவதி ரஜந்யாம் பாதுகே ரங்கபந்தௌ சரணகமல பார்ச்வே ஸாதரம் வர்த்தஸே த்வம் பணிபதிசயநீயாத் உத்திதஸ்ய ப்ரபாதே ப்ரதமநய பாதம் பாவநம் ப்ராப்து காமா

பெரியபெருமாளின் பாதுகையே! பெரியபெருமாள் இரவில் தனது படுக்கையில் சயனித்துள்ளபோது, தாமரை மலர் போன்ற அவனது அழகான திருவடிகளின் அருகிலேயே நீ உள்ளாய். ஏன் என்றால் - பெரியபெருமாள் காலைப்பொழுதில் தனது ஆதிசேஷன் என்ற படுக்கையில் இருந்து துயில் எழும்போது, அவனது முதல் பார்வையை நீ பெற்றுவிட வேண்டும் என்ற ஆசை காரணமாக அல்லவோ?