Sri Paduka Sahasram - Paththati 10 - ச்ருங்கார பத்ததி (ச்லோகம் 256)
Paththati 10 - ச்ருங்கார பத்ததி
நித்ராயிதஸ்ய கமிது: மணிபாதுகே த்வம் பர்யங்கிகா பரிஸரம் ப்ரதிபத்யமாநா ச்வாஸாநில ப்ரசலிதேந புஜஸ்ய பீக்ஷ்ணம் நாபீ ஸரோஜரஜஸா நவம் அங்கராகம்
இரத்தினக்கற்கள் பதிக்கப் பெற்ற பாதுகையே! ஸ்ரீரங்கநாதன் கட்டிலில் உறங்கிக் கொண்டிருக்கிறான். அப்போது அவன் கட்டிலில் அருகில் நீ உள்ளாய். அவன் விடும் மூச்சுக்காற்றில், அவனது நாபிக்கமலத்தில் உள்ள மகரந்தத் துளிகள் உன் மீது வந்து படிந்தபடி உள்ளன. இவ்விதம் உனக்கு சந்தனப் பூச்சு நடைப்பெறுகிறது போலும்.