Sri Paduka Sahasram - Paththati 10 - ச்ருங்கார பத்ததி (ச்லோகம் 255)
Paththati 10 - ச்ருங்கார பத்ததி
நிர்விச்யமாநம் அபி நூதந ஸந்நிவேசம் கைவல்ய கல்பித விபூஷண காயகாந்திம் காலேஷு நிர்விசஸி ரங்கயுவாநம் ஏகா ச்ருங்கார நித்ய ரஸிகம் மணிபாதரஷே
இரத்தினக்கற்களால் இழைக்கப்பட்ட பாதுகையே! எத்தனை அனுபவித்தாலும் புதியவனாகவே ஸ்ரீரங்கநாதன் உள்ளான். அத்தனை அழகான திவ்யமான திருமேனி கொண்டவனாக உள்ளான். எந்தவித ஆபரணங்களும் அணியாமல் இருக்கின்ற போதும், ஆபரணங்கள் அணித்தவன் போலத் தோன்றுகிறான். இவ்விதமாக அந்தந்த காலகட்டங்களில் நீ அவனுடனே இருந்து கொண்டு அவனைத் தனியாக அனுபவித்தபடி உள்ளாய்.