Sri Paduka Sahasram - Paththati 10 - ச்ருங்கார பத்ததி (ச்லோகம் 254)
Paththati 10 - ச்ருங்கார பத்ததி
அஸஹாய க்ருஹீத ரங்கநாதாம் அவரோதாங்கணஸீம்நி பாதுகே த்வாம் ஸுத்ருஸ: ஸ்வயம் அர்ச்சயந்தி தூராத் அவதம் ஸோத்பல வாஸிதை: அபாங்கை:
நம்பெருமாளின் பாதுகையே! நம்பெருமாள் உன்னைத் தனது திருவடிகளில் சாற்றிக் கொண்டு அந்தப்புரத்திற்குச் செல்கிறான். அப்போது அங்குள்ள பெண்கள் செய்வதென்ன? அவர்கள் தங்கள் காதுகளில் அலங்காரமாக வைத்துள்ள நெய்தல் மலரின் நறுமணம் நிறைந்த கண்களால் உன்னைத் தங்கள் கடைக்கண் பார்வை கொண்டு பார்த்து வணங்கி நிற்கின்றனர் (இங்கு நாயகனான நம்பெருமாளுடன் வரும் ப்ரதான நாயகியாக பாதுகை கூறப்பட்டது காண்க).