Sri Paduka Sahasram - Paththati 10 - ச்ருங்கார பத்ததி (ச்லோகம் 253)

Paththati 10 - ச்ருங்கார பத்ததி

அவதாத ஹிமாம் ஸுக அநுஷக்தம் பதரக்ஷே த்வயி ரங்கிண கதாசித் கிம் அபி ஸ்திதம் அத்வதீய மால்யம் விரளாவஸ்தித மௌக்திகம் ஸ்மராமி

ஒரு நேரத்தில் ஸ்ரீரங்கநாதன் வெளுத்த ஈர வஸ்திரத்துடனும், நெருக்கம் இல்லாமல் அங்கும் இங்குமாக உள்ள முத்துமாலையுடனும் அழகாக உன் மீது எழுந்தருளியிருப்பான். அப்போது அவன் திருவடிகளில் மலர்மாலையும் சாற்றப்பட்டிருக்கும். இதனைக் காணும்போது, சந்தனப் பூச்சிற்குப் பின்னர் (கடந்த ச்லோகம் காண்க) உனக்கு இடப்பட்ட மாலை என்றே நான் எண்ணுகிறேன்.