Sri Paduka Sahasram - Paththati 10 - ச்ருங்கார பத்ததி (ச்லோகம் 252)
Paththati 10 - ச்ருங்கார பத்ததி
ப்ரணத த்ரிதசேந்தர மௌளிமாலா மகரந்த அர்த்ர பராக பங்கிலேந அநுலிம்பதி பாதுகே ஸ்வயம் த்வாம் அநுரூபேண பதேந ரங்கநாத:
ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! தேவர்கள் அனைவரும் ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளில் தலை சாய்த்து வணங்குகின்றனர். அப்போது அவர்கள் அணிந்துள்ள மாலைகளில் உள்ள தேன், அவனது திருவடிகளில் உள்ள தூசிகளுடன் கலந்து, சேறு போன்று ஆகிறது. இப்படிப்பட்ட உயர்ந்த திருவடிச் சேற்றை உன் மீது சந்தனம் போன்று ஸ்ரீரங்கநாதன் எப்போதும் பூசுகிறான் (நாயகன் நாயகிக்கு சந்தனம் பூசுவதைக் கூறுகிறார்).