Sri Paduka Sahasram - Paththati 10 - ச்ருங்கார பத்ததி (ச்லோகம் 251)
Paththati 10 - ச்ருங்கார பத்ததி
சௌரே: ச்ருங்கார சேஷ்டாநாம் ப்ரஸூதிம் பாதுகாம் பஜே யாம் ஏஷ புங்க்தே சுத்தாந்தாத் பூர்வம் பச்சாத் அபி ப்ரபு:
பெரியபெருமாளின் ச்ருங்கார ரஸத்திற்கு ஏதுவாக உள்ள பாதுகையை நான் வணங்குகிறேன். பாதுகை எவ்விதம் ஏதுவாக உள்ளது என்றால் - அவன் அந்தப்புரம் செல்வதற்கும், அங்கிருந்து மீண்டு வருவதற்கும் பாதுகையைச் சாற்றிக் கொண்டு அல்லவோ செல்கிறான்?