Sri Paduka Sahasram - Paththati 9 - வைதாளிகா பத்ததி (ச்லோகம் 249)

Paththati 9 - வைதாளிகா பத்ததி

பரிஜநவநிதாபி: ப்ரேஷித: ப்ராஞ்ஜலிஸ்த்வாம் ப்ரணமதி மதநோ அயம் தேவ சுத்தாந்ததாஸ: பணிபதி சயநீயம் ப்ராபயித்ரீ ஸலீலம் பதகமலம் இயம் தே பாதுகா பர்யுபாஸ்தாம்

ஸ்ரீரங்கநாதா! அந்தப்புரத்தில் வேலைக்காரர்கள் மூலம் மன்மதன் அனுப்பப்பட்டுள்ளான். அவன் உன் முன்பாக குவிந்த கைகளுடன் நின்று கொண்டு வணங்கியபடி உள்ளான். ஆதிசேஷன் என்ற படுக்கைக்கு உன்னை எழுந்தருளிச் செய்ய பாதுகை தயாராக உள்ளது. ஆகவே தாமரை போன்ற உனது திருவடிகள் பாதுகையை விரைந்து அடைய வேண்டும்.