Sri Paduka Sahasram - Paththati 9 - வைதாளிகா பத்ததி (ச்லோகம் 248)
Paththati 9 - வைதாளிகா பத்ததி
ஆஸநாத் உசிதம் ஆஸநாந்தரம் ரங்கநாத யதி கந்தும் ஈஹஸே ஸந்நதேந விதிநா ஸமர்ப்பிதாம் ஸப்ரஸாதம் அதிரோஹ பாதுகாம்
ஸ்ரீரங்கநாதா! நீ ஓர் ஆசனத்தில் இருந்து மற்றோர் ஆசனத்திற்குச் செல்ல விரும்புகின்றாய் போலும். அதனால்தான் நான்முகன் தனது கைகளில் உனது பாதுகையைத் தயாராக வைத்துக்கொண்டு நிற்கிறான் போலும். அவற்றைச் சாற்றிக் கொள்வாயாக.