Sri Paduka Sahasram - Paththati 9 - வைதாளிகா பத்ததி (ச்லோகம் 247)
Paththati 9 - வைதாளிகா பத்ததி
திவ்ய அப்ஸரோபி: உபதர்சித தீப வர்கே ரங்காதிராஜ ஸுபகே ரஜநீமுகே அஸ்மிந் ஸம்ரக்ஷிணீ சரணயோ: ஸவிலாஸ வ்ருத்தி: நீராஜநாஸநம் அஸௌ நயது ஸ்வயம் த்வாம்
ஸ்ரீரங்கராஜனே! பரமபதத்தில் உள்ள அப்ஸரஸ்கள் பலரும் ஸந்த்யா காலம் ஆகி விட்டபடியால் தீபம் ஏந்தி, உனக்கு மங்கள ஆலத்தி எடுக்க வந்துள்ளனர். உன்னுடன் எப்போதும் உல்லாசமாக நடக்க வேண்டும் என்ற எண்ணமும், உனது திருவடிகளை எப்போதும் பாதுகாக்கவேண்டும் என்ற எண்ணமும் கொண்ட பாதுகையானது, உன்னை ஆலத்திக்கான ஆஸனத்தில் எழுந்தருளச் செய்ய வேண்டும்.