Sri Paduka Sahasram - Paththati 9 - வைதாளிகா பத்ததி (ச்லோகம் 246)

Paththati 9 - வைதாளிகா பத்ததி

வ்ருத்தம் க்ரமேண பஹுதா நியுதம் விதீநாம் அர்த்தம் த்வதீயம் இதம் அங்குரிதம் தவாஹ்ந: நீளாஸகீபி: உபநீய நிவேச்யமாநா மங்த்தும் ப்ரபோ த்வரயதே மணிபாதுகே த்வாம்

ப்ரபோ! ஸ்ரீரங்கநாதா! வரிசையாகப் பல லட்சம் நான்முகன்களின் ஆயுள் காலம் முடிந்து விட்டது. இதோ பார்! உனது தினத்தின் பிற்பகல் வந்து விட்டதை இது உணர்த்துகிறது. நப்பின்னை பிராட்டியின் தோழிகள் மூலம் கொண்டு வந்து சமர்ப்பிக்கப்பட்ட பாதுகையானது, உன்னைத் திருமஞ்சனம் செய்து கொள்ள அழைக்கிறது.