Sri Paduka Sahasram - Paththati 9 - வைதாளிகா பத்ததி (ச்லோகம் 245)
Paththati 9 - வைதாளிகா பத்ததி
ரங்காதீச மருத்கணஸ்ய மகுடா ஆம்நாய ப்ருந்தஸ்ய வா ப்ரத்யாநீய ஸமர்ப்பிதா விதிமுகை: வாரக்ரமாத் ஆகதை: வாஹா அரோஹண ஸம்ப்ருதம் ச்ரமபரம் ஸம்யக்விநேதும் க்ஷமா லீலா ஸஞ்சரண ப்ரியா ஸ்ப்ருசது தே பாதாம்புஜம் பாதுகா
ஸ்ரீரங்கநாதா! உன்னுடைய பாதுகையை நான்முகன் முதலான தேவர்கள் வரிசையாக நின்று தங்கள் தலையில் ஏற்கின்றனர். வேதங்களும் தங்கள் தலைகளில் ஏற்றுக் கொள்கின்றன. இவ்விதம் சஞ்சரித்த பாதுகை, இப்போது மீண்டும் உன்னிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இவ்விதமாக பலவிதமான வாகனங்கள் மீது ஏறி சஞ்சாரம் செய்த காரணத்தினால் பாதுகைக்கு மிகுந்த களைப்பு ஏற்பட்டிருக்கும். இவ்விதம் அமர்ந்தபடி சென்ற பின்னர், சற்று நேரம் நீ பாதுகையை அணிநது கொண்டு உல்லாசமாக நடப்பதை அல்லவோ பாதுகை விரும்பி நின்றது? ஆகவே உனது திருவடிகளை அவை தொடவேண்டும்.