Sri Paduka Sahasram - Paththati 9 - வைதாளிகா பத்ததி (ச்லோகம் 244)

Paththati 9 - வைதாளிகா பத்ததி

உபநமதி முஹுர்த்தம் சேஷ ஸித்தாந்த ஸித்தம் தத் இஹ சரணரக்ஷா ரங்கநாத த்வயைஷா ம்ருதுபதம் அதிரூடா மஞ்ஜுபி: சிஞ்ஜிதை: ஸ்வை: உபதிசது ஜநாநாம் உத்ஸவ ஆரம்பவார்த்தாம்

ஸ்ரீரங்கநாதா! சுபமான முஹுர்த்த காலம் வந்துவிட்டது. ஆதிசேஷனின் அவதாரமாகிய உடையவரின் ”எம்பெருமானார் தரிசனம்” என்னும் முறைப்படிச் செய்ய வேண்டியவைகள் நடைபெற வேண்டும். உனது திருவடிகளைக் காப்பதில் குறியாக உள்ள உனது பாதுகைகள் மீது உனது திருவடிகளை மெதுவாக எடுத்து வைப்பாயாக. பின்னர் நீ அழகாக நடந்து வரும்போது ஒலிக்கின்ற பாதுகைகளின் ஒலி, மக்களுக்கு அன்றைய உற்சவம் தொடங்கியதை அறிவிக்கட்டும்.