Sri Paduka Sahasram - Paththati 9 - வைதாளிகா பத்ததி (ச்லோகம் 243)

Paththati 9 - வைதாளிகா பத்ததி

பத்மா ஜுஷ்டம் பஜது சரணம் பாதுகா லப்தவாரா ப்ரத்யாஸந்நா: தவ பரிஜநா: ப்ராதராஸ்தாந யோக்ய: அர்த்த உந்மேஷாத் அதிகஸுபகாம் அர்த்த நித்ராநுஷங்காம் நாபீ பத்மே தவ நயநயோ: நாத பச்யந்து சோபாம்

ஸ்ரீரங்கநாதா! காலை வேலையில் உனக்குத் தொண்டு புரியும் பணியாளர்கள் வந்து விட்டனர். உனது தாமரை போன்ற கண்களில் உள்ள உறக்கம் பாதி கலைந்தும் கலையாமலும் உள்ளதால், உனது இமை பாதி மூடியும் திறந்தும் உள்ளது. இந்த அழகைக் கண்டு, நாபிக் கமலத்தில் உள்ள தாமரை மலர், உனது கண்கள் போல மலர்ந்தும் மலராமலும் உள்ளது. இந்த அழகை அவர்கள் அனுபவிக்கவேண்டும். இரவு முழுவதும் உனது திருவடிகளை வணங்கி வருடிய மஹாலக்ஷ்மியின் சேவையை இனிப் பகலில் பாதுகை ஏற்றுக் கொள்ள வேண்டும் (ஆகவே துயில் எழுவாயாக).