Sri Paduka Sahasram - Paththati 9 - வைதாளிகா பத்ததி (ச்லோகம் 242)
Paththati 9 - வைதாளிகா பத்ததி
உசிதம் உபசரிஷ்யந் ரங்கநாத ப்ரபாதே விதிசிவ ஸநக ஆத்யாந் பாஹ்ய கக்ஷ்யா நிருந்தாந் சரண கமல ஸேவா ஸௌக்ய ஸாம்ராஜ்ய பாஜாம் ப்ரதம விஹித பாகாம் பாதுகாம் ஆத்ரியேதா:
ஸ்ரீரங்கநாதா! உனது திருப்பள்ளியெழுச்சிக்கு முன்பாக வந்து விட்ட சிவன், நான்முகன், ஸநகர் போன்றவர்கள் முன் வாயிலில் நிறுத்தப்பட்டுள்ளனர். அவர்களை நீ தகுந்த வழியில் உபசாரம் செய்யவேண்டும். ஆகவே உனது திருவடிகள் என்னும் தாமரைகளின் சுகம் பெறுபவர்களில் முதல் இடம் பிடித்துள்ள பாதுகையை, இதன் மூலம் சக்ரவர்த்தி என்ற பட்டம் பெற்ற பாதுகையை, நீ சாற்றிக் கொண்டு எழ வேண்டும்.