Sri Paduka Sahasram - Paththati 9 - வைதாளிகா பத்ததி (ச்லோகம் 241)

Paththati 9 - வைதாளிகா பத்ததி

நமஸ்தே பாதுகே பும்ஸாம் ஸம்ஸார அர்ணவே ஸேதவே யதாரோஹஸ்ய வேதாந்தா: வந்தி வைதாளிகா: ஸ்வயம்

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! உயிர்கள் பிறந்து இறப்பதையே தனது இயல்பாக உடையது ஸம்ஸாரம் என்ற கடல் ஆகும். இந்தக் கடலில் அணை போன்றுள்ள உனக்கு என் நமஸ்காரங்கள். உபநிஷத்துக்கள் செய்வது என்ன? பெரியபெருமாளைத் துயில் எழுப்பி, உன்னைச் சாற்றிக் கொள்ளவேண்டும் என்பது அல்லவா? (வைதாளிகர்கள் என்பவர்கள் எம்பெருமானைத் துயில் எழுப்புபவர்கள் ஆவர். இங்கே வைதாளிகர்களாக உபநிஷத்துக்கள் உள்ளன என்றார்).