Sri Paduka Sahasram - Paththati 8 - நிர்யாதனா பத்ததி (ச்லோகம் 238)

Paththati 8 - நிர்யாதனா பத்ததி

நிகர்த்ய தேவி பரத அஞ்ஜலி பத்ம மத்யாத் பூய: ஸமாகதவதீ புருஷோத்தமேந பத்மேவ பத்ரம் அகிலம் மணிபாதரக்ஷே ப்ராதுச்சகார பவதீ ஜகதாம் த்ரயாணாம்

இரத்தினக்கற்கள் கொண்டு இழைக்கப்பட்ட பெரியபெருமாளின் பாதுகா தேவியே! பரதனின் கைகள் தாமரை மலர் போன்று குவித்து இருந்தன. அதன் நடுவில் இருந்து நீ வெளிக் கிளம்பி இராமனின் திருவடிகளை அடைந்தாய். இப்படியாக தாமரையில் இருந்து வெளிப்பட்ட மஹாலக்ஷ்மி போன்று மூன்று உலகங்களுக்கும் ஏற்ற நன்மைகளைச் செய்தாய்.