Sri Paduka Sahasram - Paththati 8 - நிர்யாதனா பத்ததி (ச்லோகம் 237)
Paththati 8 - நிர்யாதனா பத்ததி
நிஸ்தீர்ண துக்க ஜலதே: அநகஸ்ய தேவி த்வத் ஸம்ப்ரயுக்த ரகுநாத பதாந்வயேந ஸத்ய ஸநந்தன முகை: அபி துர்நிரீக்ஷா ஸாம்ராஜ்ய ஸம்பத் அபரா பரதஸ்ய ஜஜ்ஞே
பாதுகாதேவியே! உன்னுடன் தொடர்பு கொண்டதால் உயர்ந்த இராமனின் திருவடிகள் மூலமாகப் பரதன் தனது துக்கம் என்ற பெரிய கடலை எளிதாகக் கடந்தான். இதன் மூலம் தூய்மை அடைந்த பரதன், ஸநந்தர் போன்றவர்கள் கூடக் காண இயலாத தேஜஸ் அடைந்தான். இதனால் பக்தர்களுக்குச் சக்ரவர்த்தி போன்றவன் என்ற பட்டம் பெற்றான்.