Sri Paduka Sahasram - Paththati 8 - நிர்யாதனா பத்ததி (ச்லோகம் 236)

Paththati 8 - நிர்யாதனா பத்ததி

யா அளௌ சதுர் தச ஸமா: பதிவிப்ரயுக்தா விச்வம்பரா பகவதீ வித்ருதா பவத்யா விந்யஸ்ய தாம் ரகுபதே: புஜசைல ச்ருங்கே பூய: அபி தேந ஸஹிதாம் பவதீ பபார

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! அயோத்தியானது தனது கணவனான இராமனை பதினான்கு ஆண்டுகள் பிரிந்து இருந்தது. அப்போது நீ அந்த நாட்டை ஆறுதலாகத் தாங்கி நின்றாய். இராமன் அயோத்தி திரும்பியதும் அவனது மலைகள் போன்ற தோள்களில் அந்த நாட்டை மீண்டும் ஏற்றினாய். அதன் பின்னர் அவனுடன் சேர்ந்து நின்று காணப்பட்ட பூமியைத் தாங்கி நின்றாய்.