Sri Paduka Sahasram - Paththati 8 - நிர்யாதனா பத்ததி (ச்லோகம் 235)
Paththati 8 - நிர்யாதனா பத்ததி
பாதாவநி ப்ரதிகதஸ்ய புரீம் அயோத்யாம் பௌலஸ்த்யஹந்து: அபிஷேக ஜல அர்த்ர மூர்த்தே: அம்ஸே யதார்ஹம் அதிவாஸ்ய நிஜை: யசோபி: கஸ்தூரிகேவ நிஹிதா வஸுதா த்வயைவ
பெரியபெருமாளின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! அயோத்தியை மீண்டும் அடைந்த இராமனின் திருமேனி, உனது பட்டாபிஷேக நீரால் நனைக்கப்பட்டது. இராவணனை வதம் செய்து முடித்த இராமனின் தோள்கள் மீது, நீ இத்தனை நாட்கள் உனது பெருமை விளங்கத் தாங்கி நின்ற பூமியை, எளிதான கஸ்தூரி போன்று இறக்கி வைத்தாய் (பூமியை ஆள்வது என்பது இராமனுக்கும் பாதுகைக்கும் ஓர் அலங்காரம் போன்று அழகுக்கு மட்டுமே ஆகும், பாரம் ஆகாது. இதனால்தான் கஸ்தூரி என்றார்).