Sri Paduka Sahasram - Paththati 8 - நிர்யாதனா பத்ததி (ச்லோகம் 234)
Paththati 8 - நிர்யாதனா பத்ததி
மாத: த்வயைவ ஸமயே விஷமே அபி ஸம்யக் ராஜந்வதீம் வஸுமதிம் அவலோக்ய ராம: ஸஞ்ஜீவநாய பரதஸ்ய ஸமக்ர பக்தே: ஸத்ய ப்ரதிச்ரவதயா ஏவ சகார ராஜ்யம்
இராமனின் திருவடிகளை அவனது தாய் போன்று பாதுகாக்கும் பாதுகையே! இராமன் கானகம் சென்ற காலகட்டமானது மிகவும் இக்கட்டானது ஆகும். அந்த நேரத்தில் நாட்டை ஆள்வதற்கு ஏற்றவள் நீ என்று அறிந்து, உனக்குப் பட்டாபிஷேகம் செய்விக்கப்பட்டது. கானகத்தில் இருந்து மீண்டும் நாடு திரும்பிய இராமன், தன்னை விட நீயே உயர்ந்தவள் என்று அறிந்திருந்தான். ஆயினும், தான் பட்டம் சூட்டிக் கொள்ளவில்லை என்றால், உறுதியான சபதம் கொண்ட பரதன், தன்னை மாய்த்துக் கொள்வான் என்று உணர்ந்து, அவனைப் பிழைக்க வைப்பதற்காக அல்லவோ பட்டம் ஏற்றுக் கொண்டான்?