Sri Paduka Sahasram - Paththati 8 - நிர்யாதனா பத்ததி (ச்லோகம் 233)
Paththati 8 - நிர்யாதனா பத்ததி
தத்தாத்ருசோ: சரணயோ: ப்ரணிபத்ய பர்த்து: பௌராஸ்த்வயா வித்ருதயோ: ப்ரதிபந்ந ஸத்த்வா: ப்ராப்த அபிஷேக விபவாம் அபி பாதுகே த்வாம் ஆனந்தபாஷ்ப ஸலிலை: புந: அப்யஷிஞ்சந்
ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! உன்னைத் தனது திருவடிகளில் மீண்டும் தரிக்கப்பெற்ற இராமன் அழகு பெற்றான். இப்படியாக உள்ள தங்கள் சக்ரவர்த்தியான இராமனின் திருவடிகளில் அந்த நாட்டு மக்கள் விழுந்து வணங்கி, மிக்க மகிழ்ச்சி அடைந்தனர். உனக்கு பட்டாபிஷேகத்தின்போது புண்ணிய நீர் சேர்க்கப்பட்டபோதிலும், இப்போது தங்கள் ஆனந்தக் கண்ணீர் கொண்டு மக்கள் மீண்டும் உனக்கு பட்டாபிஷேகம் செய்து வைத்தனர்.