Sri Paduka Sahasram - Paththati 8 - நிர்யாதனா பத்ததி (ச்லோகம் 232)

Paththati 8 - நிர்யாதனா பத்ததி

நிர்வ்ருத்த ராக்ஷஸசமூ ம்ருகயா விஹார: ரங்கேச்வர: ஸ கலு ராகவ வம்ச கோப்தா வம்சக்ரமாத் உபநதம் பதம் ஆததாந: மாந்யம் புநஸ்த்வயி பதம் நிததே ஸ்வகீயம்

அழகியமணவாளனின் பாதுகையே! ரகு வம்சத்தை நிலை நிறுத்தவும், அரக்கர்களின் படையை வேட்டை ஆடுவது போன்று எளிதாக ஒரு விளையாட்டாக அழிப்பதற்காகவும் இராமனாக அவதரித்தவன் ஸ்ரீரங்கநாதன் ஆவான். அவன் உன்னிடம் இருந்து தனது பட்டத்தை திரும்பப் பெற்றுக் கொண்டு, மிகவும் உயர்ந்த தனது திருவடிகளை உன்னிடம் மீண்டும் அளித்தான்.