Sri Paduka Sahasram - Paththati 8 - நிர்யாதனா பத்ததி (ச்லோகம் 231)

Paththati 8 - நிர்யாதனா பத்ததி

துல்யே அபி தேவி ரகுவீர பத ஆச்ரயத்வே பூர்வ அபிஷேகம் அதிகம்ய கரீயஸீ த்வம் தேநைவ கல்வபஜதாம் மணிபாதரக்ஷே ரக்ஷ: ப்லவங்கம் அபதீ பவதீம் ஸ்வமூர்த்நா

இரத்தினக்கற்கள் கொண்டு பதிக்கப்பட்ட ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! இராமனின் திருவடிகளை மட்டுமே அண்டி உள்ளவள் நீ ஆவாய். ஆனாலும் இராமனுக்கு முன்பாகவே பட்டாபிஷேகம் செய்விக்கப்பட்டு, அவன் ஸிம்ஹாஸனத்தில் நீ அமர்ந்தாய். இதனால் நீ பெரிதும் உயர்ந்தவள் ஆனாய். அதனால்தான் உன்னை விபீஷணன் போன்றவர்கள் போற்றி நின்றனர், தங்கள் தலைகளில் உன்னை ஏற்றனர்.