Sri Paduka Sahasram - Paththati 8 - நிர்யாதனா பத்ததி (ச்லோகம் 230)
Paththati 8 - நிர்யாதனா பத்ததி
ஸம்ப்ரேக்ஷ்ய மைதிலி ஸுதா மணிபாதரக்ஷே ப்ரத்யுத்கதஸ்ய பவதீம் பரதஸ்ய மௌளௌ நிர்திச்ய ஸா நிப்ருதம் அஞ்ஜலிநா புரஸ்தாத் தராதிகா: ப்ரியஸகீ: அசிஷத் ப்ரணந்தும்
இரத்தினக்கற்களால் இழைக்கப்பட்ட பாதுகையே! இராமன் முன்பாக பரதன் உன்னைத் தனது தலையில் எழுந்தருளிப் பண்ணிக்கொண்டு வந்தான். இதனைப் பார்த்த சீதை தனது கைகள் குவித்து உன்னை வணங்கி, தனது கண் ஜாடை மூலம் தன் தோழிகளான தாரை போன்றவர்களையும் உன்னை வணங்குமாறு கூறினாள்.