Sri Paduka Sahasram - Paththati 8 - நிர்யாதனா பத்ததி (ச்லோகம் 229)

Paththati 8 - நிர்யாதனா பத்ததி

ப்ரத்யாகதஸ்ய பவதீம் அவலோக்ய பர்த்து: பாதாரவிந்த ஸவிதே பரதோபநீதாம் பூர்வ அபிஷேக விபவ அப்யுசிதாம் ஸபர்யாம் மத்யே ஸதாம் அக்ருத மைதிலராஜகன்யா

பெரியபெருமாளின் பாதுகையே! இராமன் அயோத்தி திரும்பியவுடன் அவனுடைய தாமரை போன்ற அழகான திருவடிகளின் அருகே பரதன் உன்னைச் சமர்ப்பணம் செய்தான். தனது கணவனான இராமனின் திருவடிகளின் அருகில் வைக்கப்பட்ட உன்னை ஜனகனின் மகளான சீதை பார்த்தாள். இராமனுக்கு முன்பாகவே பட்டாபிஷேகம் செய்விக்கப்பட்ட உன்னைப் பெருமையுடன் கண்ட அவள், அங்கிருந்த அனைத்துப் பெரியவர்களும் பார்த்து நிற்க, உனக்கு ஏற்ற மரியாதைகளைச் செய்தாள் (சீதையும் பாதுகையும் இராமனைச் சேர்ந்தவர்கள் என்றாலும், சீதைக்கு முன்பாக பாதுகைகள் ஸிம்ஹாஸனத்தில் அமர்ந்ததால் பாதுகைக்கு ஏற்றம் அதிகம். ஆகையால் சீதை வணங்கினாள் என்று கருத்து).