Sri Paduka Sahasram - Paththati 8 - நிர்யாதனா பத்ததி (ச்லோகம் 228)

Paththati 8 - நிர்யாதனா பத்ததி

ச்ருத்வா ஏவம் ஹநுமந் முகாத் ரகுபதே: ப்ரத்யாகதிம் தத் க்ஷணாத் ஆஸீதத் பரத அநுவர்த்தன வசாத் ஆரூட கும்பஸ்தலாம் கால உந்நித்ர கதுஷ்ண தாந மதிரா மாத்யத் த்விரேப த்வநி ச்லாகாசாடுபி: அஸ்துதேவ பவதீம் சத்ருஞ்ஜய: குஞ்ஜர:

பாதுகையே! இராமனின் வருகை குறித்து அனுமன் மூலமாகப் பரதன் அறிந்து கொண்டான். இந்தச் செய்தியை உன்னிடம் கூறிய பரதன், நீ உடனே இராமனிடம் எழுந்தருளவேண்டும் என்று விண்ணப்பம் செய்தான். இதனைக் கேட்ட நீ, உடனே பட்டத்து யானை மீது அமர்ந்தாய். நீ அமர்ந்தவுடன் அந்த யானைக்கு ஏற்பட்ட மகிழ்வு காரணமாக மெதுவான உஷ்ணத்துடன் கூடிய மதநீர் பெருகியது. அந்த மதநீரில் வந்து அமர்ந்த வண்டுகள் பெரும் ரீங்காரம் செய்தன. இதனைக் காணும்போது யானை உன்னைத் துதித்தது போன்று காணப்பட்டது.