Sri Paduka Sahasram - Paththati 8 - நிர்யாதனா பத்ததி (ச்லோகம் 227)

Paththati 8 - நிர்யாதனா பத்ததி

ராம அஸ்த்ராணி நிமித்த மாத்ரம் இஹ தே லப்த அபிஷேகா ஸ்வயம் ரக்ஷ: தத் க்ஷபயாஞ்சகார பவதீ பத்ர ஆஸநஸ்தாயிநீ யத்தோஷ்ணாம் அதிவேல தர்பதவது ஜ்வாலா ஊஷ்மளாநாம் ததா நிஷ்பிஷ்டை: கலதௌதசைல சிகரை: கர்ப்பூர சூர்ணாயிதம்

நம்பெருமாளின் பாதுகையே! இராவணனின் புஜங்கள் இரண்டும் அக்னியின் ஜ்வாலை போன்று இருந்தன. அவன் கைலாய மலையை அப்படிப்பட்ட புஜங்களால் உயர்த்தியபோது, தீயில் இட்ட கர்ப்பூரம் போன்று, கைலாய மலையின் சிகரங்கள் பொடியாகிவிட்டன. இப்படிப்பட்ட வலிமை உடைய இராவணனை இராமன் தனது அஸ்திரம் மூலம் அழித்தான் என்பது பெயரளவில் மட்டுமே! உண்மையாக நடந்தது என்ன? ஸிம்ஹாஸனத்தில் அமர்ந்தபடி நீயல்லவா இராமனின் பாணங்கள் கொண்டு இராவணனை அழிந்தாய்?