Sri Paduka Sahasram - Paththati 8 - நிர்யாதனா பத்ததி (ச்லோகம் 226)

Paththati 8 - நிர்யாதனா பத்ததி

ரகுபதி பதரக்ஷே ரத்நபீடே யதா த்வாம் அகில புவந மாந்யாம் அப்யஷிஞ்சத் வஸிஷ்ட: தஸமுக மஹிஷீபி: தேவி: பாஷ்பாயிதாபி: ஸ்தநயுகம் அபிஷேக்தும் தத் க்ஷணாத் அந்வமம்ஸ்தா:

ரகு குலத்தின் நாயகனான இராமனின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகாதேவியே! அனைத்து உலகங்களும் போற்றும்படியான தகுதி உள்ளவள் நீ ஆவாய். இப்படிப்பட்ட உன்னை வசிஷ்டர் இரத்தினக்கற்களால் இழைக்கப்பட்ட ஸிம்ஹாஸனத்தில் அமர வைத்து, பட்டாபிஷேகம் செய்து வைத்தார். அந்த நேரத்திலேயே இராவணனின் மனைவிமார்களின் கண்ணீர், அவர்களின் ஸ்தனங்களை நனைத்தபடி நின்றன.