Sri Paduka Sahasram - Paththati 8 - நிர்யாதனா பத்ததி (ச்லோகம் 225)

Paththati 8 - நிர்யாதனா பத்ததி

ப்ரதயிதும் அபிஷேகம் பாதுகே தாவகீநம் துரித சமநதக்ஷே துந்துபௌ தாட்யமாநே ஸபதி பரிக்ருஹீதம் ஸாத்வஸம் தேவி நூநம் தசவதந வதூநாம் தக்ஷிணை: நேத்ர கோசை:

பாதுகாதேவியே! உன்னுடைய பட்டாபிஷேகம் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தவேண்டும் என்பதால், அயோத்தி முழுவதும் வாத்தியங்கள் முழங்கின. இவை மூலம் அனைத்து இடங்களிலும் உள்ள பாவங்கள் அகன்றன. இலங்கையில் உள்ள இராவணனின் மனைவிமார்களுடைய வலது கண்கள் அந்த ஒலிக்கேற்றாப்போல் துடித்தபடி நின்றன (பெண்களின் வலது கண் துடிப்பது தீமைக்கு அறிகுறி என்று கருத்து).