Sri Paduka Sahasram - Paththati 8 - நிர்யாதனா பத்ததி (ச்லோகம் 224)

Paththati 8 - நிர்யாதனா பத்ததி

ஆயோத்யகை: த்வத் அபிஷேக ஸமித்த ஹர்ஷை: ஆத்மாபிதா: ச்ருதி ஸுகம் நநு தே ததாநீம் ராமஸ்ய ராக்ஷஸ சிர: லவநே அபி அசாம்யந் யேஷாம் த்வநி: விஜய சங்க ரவ: பபூவ

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! உனது பட்டாபிஷேகத்தின்போது முழங்கப்பட்ட சங்குகளின் நாதம், அயோத்தி மக்களின் காதுகளில் இன்பமாகப் புகுந்து, அவர்களுக்கு பெரும் மகிழ்வு உண்டாக்கியது. ஆனால் அதே சங்குகளின் ஒலியானது, இராமன் அரக்கர்களின் தலையை அறுக்கும் காலம்வரை இலங்கையில் ஓயாமல் ஒலித்து நின்று, இராமனின் வெற்றியை அறிவிப்பதாக இருந்தன.