Sri Paduka Sahasram - Paththati 8 - நிர்யாதனா பத்ததி (ச்லோகம் 223)

Paththati 8 - நிர்யாதனா பத்ததி

தேவி த்வயா ஸ்நபந ஸம்பதி ஸம்ச்ரிதாயாம் தக்தே புரே தசமுகஸ்ய வலீமுகேந ஆஸீத் தத: ப்ரப்ருதி விச்வ ஜந ப்ரதீதம் அத்ப்ய: அக்நி: இதி அவிததம் வசநம் முநீநாம்

பாதுகாதேவியே! உனது பட்டாபிஷேகத்தின்போது சேர்க்கப்பட்ட புனித நீர் முதலானவை இலங்கைவரை சென்றது. இராவணனின் இலங்கை நகரம், அனுமனால் தீயிட்டு எரிக்கப்பட்டது. வேதங்களின் கூறப்பட்ட “நீரில் இருந்து நெருப்பு உண்டானது” என்னும் வரியானது, இந்த நிகழ்வுகள் மூலம் மக்களுக்குத் தெளிவாக உணர்த்தப்பட்டது.