Sri Paduka Sahasram - Paththati 8 - நிர்யாதனா பத்ததி (ச்லோகம் 222)

Paththati 8 - நிர்யாதனா பத்ததி

ஆவர்ஜிதம் விதிவிதா மணிபாதரக்ஷே பத்மாஸந ப்ரியஸுதேந புரோஹிதேந ஆஸீந்நிதாநம் அபிஷேக ஜலம் த்வதீயம் நக்தஞ்சர ப்ரணயிநீ நயநோதகாநாம்

இரத்தினக்கற்கள் கொண்டு இழைக்கப்பட்ட ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! அனைத்து சாஸ்திரங்களை அறிந்தவரும், நான்முகனின் ப்ரியமான புத்திரரும், குலகுருவும் ஆகிய வசிஷ்டர் மூலம், உன் மீது புனிதமான நீர் பட்டாபிஷேகத்தின்போது சேர்க்கப்பட்டது. இந்த நீரே, அரக்கர்களின் மனைவிகளின் கண்களில் இருந்து வெளிவரும் கண்ணீராக மாறியது.