Sri Paduka Sahasram - Paththati 8 - நிர்யாதனா பத்ததி (ச்லோகம் 221)
Paththati 8 - நிர்யாதனா பத்ததி
தாப உத்கம: த்வத் அபிஷேக ஜலப்ரவாஹை: உத்ஸாரித: த்வரிதம் உத்தர கோஸலேப்ய: லேபே சிராய ரகு புங்கவ பாதரக்ஷே லங்காவரோத ஸுத்ருசாம் ஹ்ருதயேஷு வாஸம்
பெரியபெருமாளின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! உன் மீது பட்டாபிஷேகத்தின்போது சேர்க்கப்பட்ட புனித நீரானது, வடக்குக் கோஸலை நாட்டில் இராமனின் பிரிவால் ஏற்பட்டிருந்த தாபத்தைத் தீர்த்தது. பின்னர் அந்த வெள்ளம் அங்கிருந்து கிளம்பி, இலங்கையை அடைந்து, அங்குள்ள பெண்களின் மனதை அடைந்து, நீண்ட காலம் இருந்தது.