Sri Paduka Sahasram - Paththati 8 - நிர்யாதனா பத்ததி (ச்லோகம் 220)

Paththati 8 - நிர்யாதனா பத்ததி

பாதாவநி த்வத் அபிஷேசந மங்களார்த்தம் பேரீசதம் ப்ருசம் அதாட்யத யத் ப்ரதீதை: ஆகர்ண்ய தஸ்ய ஸஹஸா துமுலம் நிநாதம் லங்கா கவாட நயநாநி நிமீலிதாநி

பெரியபெருமாளின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! உன்னுடைய பட்டாபிஷேகம் என்னும் மங்கலகரமான நிகழ்வின்போது, நூற்றுக்கணக்கானவர்கள் பெரிதாக வாத்தியம் ஒலித்தனர். இந்த ஓசை இலங்கை வரை கேட்டது. இதனைக் கேட்ட இலங்கையின் கதவுகள் மூடப்பட்டன.