Sri Paduka Sahasram - Paththati 8 - நிர்யாதனா பத்ததி (ச்லோகம் 219)

Paththati 8 - நிர்யாதனா பத்ததி

ஸம்பித்யமாந தமஸா ஸரயூ உபநீதை: ஸம்வர்த்திதை: தவ சுபை: அபிஷேகதோயை: மந்யே பபூவ ஜலதி: மணிபாதரக்ஷே ராம அஸ்த்ர பாவக சிகாபி: அசோஷணீய:

இரத்தினக்கற்கள் கொண்டு இழைக்கப்பட்ட பாதுகையே! தமஸா என்னும் நதி, ஸரயூ என்னும் நதி ஆகிய இரண்டின் நீரும் சேர்த்து உனக்குப் பட்டாபிஷேகம் செய்யப்பட்டது. இந்த நதிகள் இரண்டும் கடலில் சென்று கலக்கின்றன. இதனால்தான் இராமன் தனது அக்னி போன்ற அஸ்திரங்களைக் கடலில் செலுத்திய போதிலும் கடல் வற்றாமல் உள்ளது என்று நான் நினைக்கிறேன்.