Sri Paduka Sahasram - Paththati 8 - நிர்யாதனா பத்ததி (ச்லோகம் 218)
Paththati 8 - நிர்யாதனா பத்ததி
பத்ராணி தேவி ஜகதாம் ப்ரதிபாதயிஷ்யந் ப்ராகேவ யேந பவதீம் பரதோ அப்யஷிஞ்சத் மந்யே கபீச்வர விபீஷணயோர் யதாவத் ஸந்தந்யதே ஸ்ம தத ஏவ கிலாபிஷேக:
பாதுகையே! இந்த உலகம் முழுவதற்குமான நன்மைகளை, அவற்றுக்கு அளிக்க விரும்பிய காரணத்தினால், பரதன் உனக்குப் பட்டாபிஷேகம் செய்து வைத்தான். அதனால் அல்லவோ சுக்ரீவன், விபூஷணன் போன்றவர்களுக்கு முறைப்படி பட்டாபிஷேகம் நிறைவேறியது. இதனால், உலகின் நன்மைகளும் பெருகின.