Sri Paduka Sahasram - Paththati 8 - நிர்யாதனா பத்ததி (ச்லோகம் 217)

Paththati 8 - நிர்யாதனா பத்ததி

ராமஸ்ய ராக்ஷஸ வதத்வரிதஸ்ய காலே பாதாவநி ப்ரகடயந் இவ பார்ஷ்ணி குப்தம் ஆசித்ரகூடம் அதிகம்ய சசம்ஸ வார்த்தாம் அவ்யாஹத த்வத் அபிஷேக ம்ருதங்க நாத:

திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! உனது பட்டாபிஷேகத்தின்போது ஏற்பட்ட மத்தளங்களின் ஓசை தடையில்லாமல், இராமன் அப்போது இருந்த சித்ரகூடம் வரை சென்று கேட்டது. அரக்கர்களை அழிப்பதில் முனைந்துள்ள இராமனிடம் அந்த ஓசையானது, “நாம் இங்கு நாட்டைப் பாதுகாப்போம். நீவிர் முன் சென்று உமது செயல்களைத் தொடரலாம்”, என்று கூறுவது போன்று இருந்தது.