Sri Paduka Sahasram - Paththati 8 - நிர்யாதனா பத்ததி (ச்லோகம் 216)
Paththati 8 - நிர்யாதனா பத்ததி
கிம் சதுர்தசபி: ஏவ வத்ஸரை: நித்யம் ஏவ மணிபாதுகே யுவாம் பாதயோ: த்ரிபுவந ஆதிராஜ்யோ: யௌவராஜ்யம் அதிகச்சதம் ஸ்வயம்
இரத்தினக்கற்கள் கொண்டு பதிக்கப்பட்ட பாதுகையே! பதினான்கு வருடங்கள் மட்டுமா நீங்கள் (இரண்டு பாதுகைகள்) அரசாளப் போகிறீர்கள்? இராமனின் திருவடிகள் அனைத்து உலகங்களுக்கும் சக்ரவர்த்தியாக உள்ளன. ஆகவே, நீங்கள் எப்போதும் இளவரசர்களாக இருந்து வருவீர்கள்.